×

3ல் 2 பங்கு தூரத்தை கடந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இன்று இரவு நுழைகிறது சந்திரயான் 3 விண்கலம்.. ஆகஸ்ட் 23ல் கால்பதிக்கிறது!!

பெங்களூரு : இந்தியாவில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக 3ல் 2 பங்கு தூரத்தை கடந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இன்று நுழைகிறது. சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 17வது நிமிடத்தில் சந்திரயான் 3 செயற்கோள் புவிவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்திரயான் விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு கட்டமாக புவி சுற்றுவட்டபாதையில் விண்கலத்தை உயர்த்தும் பணி நடந்தது.

தொடர்ந்து, புவிவட்டப் பாதையின் இறுதி சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி நிலவின் சுற்றுப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியது. நிலவை நோக்கிய பயணத்தில் 3ல் 2 பங்கை சந்திரயான் 3 விண்கலம் நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில், இன்று இரவு 7 மணி அளவில் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் உள்வட்டப் பாதையில் செலுத்தப்பட உள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில் விண்கலம் சந்திரனின் செல்வாக்கு மண்டலத்திற்குள் நுழைவதையும் சந்திரனை மையமாக கொண்ட பயணத்தை தொடங்குவதையும் காண முடியும். நிலவுக்கு அருகில் விண்கலம் சுற்றி வரும் போது இந்த முயற்சி மேற்கொள்ளப்படும். பூமியை விட்டு அது 2.5 லட்ச கிலோ மீட்டர் தூரத்தில் நிலவை நெருங்கி கொண்டு இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதையடுத்து வரும் 23ம் தேதி நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

The post 3ல் 2 பங்கு தூரத்தை கடந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இன்று இரவு நுழைகிறது சந்திரயான் 3 விண்கலம்.. ஆகஸ்ட் 23ல் கால்பதிக்கிறது!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,India ,Moon ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு...